செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கில் எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக வித்தயாகுமார் என்பவர் தொடர்ந்த வழக்குஉச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ‘‘செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர் அமைச்சராக பதவியேற்றது தொடர்பாக எங்களது தரப்பில் நாங்கள் விளக்கங்களை பெற்று வந்துள்ளோம். அதுகுறித்து வாதிட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில், உரிய விளக்கம் வேண்டும் என்று தான் நீதிமன்றம் கூறியது. ஆனால் தற்போது வாதம் செய்ய வேண்டும் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்’’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போது நாங்கள் நோட்டீஸ் அனுப்பவோ அல்லது நடவடிக்கையோ எடுக்க போவது கிடையாது. எனவே விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அன்றை ய தினம் இந்த வழக்கு முன்னதாக விசாரித்த அமர்வில் பட்டியலிடப்படும். அதேப்போன்று அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது’’ என்று திட்உத்தரவிட்டனர்.

The post செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கில் எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: