சென்னை: சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை ஒரு பார்வையாளர் மட்டும் மாதம் 2 முறை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். நேர்காணல் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்படும். நேர்காணலின் போது பார்வையாளர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும். கிளைச்சிறைகள் மற்றும் பார்ஸ்டல் பள்ளிகளில் உள்ள உள்ள சிறைவாசிகளை பார்க்க அனுமதி இல்லை….
The post சிறைவாசிகளை பார்க்க வருவோருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் appeared first on Dinakaran.
