சென்னை: ஆளுநர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவரிடம் ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து விஞ்ஞானி நரசிம்ம ரெட்டியை ஏமாற்றிய நாசிக்கை சேர்ந்த நிரஞ்சன் குல்கர்னி கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்களுடன் தனக்கு உள்ள தொடர்பை பயன்படுத்தி தங்களுக்கு ஆளுநர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மோசடியை தொடர்ந்து மும்பை நாசிக் சாலையில் உள்ள கந்தார்வனகிரி பகுதியில் உள்ள நிரஞ்சன் குல்கர்னி வீட்டில் போலீஸ் சோதனை நடத்தினர்.
The post ஆளுநர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்பவரிடம் ரூ.5 கோடி மோசடி appeared first on Dinakaran.