அதன்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்துகொண்ட அந்த கும்பல், சிலமணி நேரத்திற்கு பின் ரங்கசாமியை இறக்கி விட்டு தப்பியது. வீட்டுக்கு வந்த ரங்கசாமி கொடுத்த புகாரின்பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், ரங்கசாமியை கடத்தியது திருப்பூரை சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகத்தின் நண்பர்களான ஈஸ்வரன் (39), ஸ்டாலின்((39), சதாசிவம் (35), சூர்யபிரபாகரன் (34), பாஸ்கரன் (35), கிருஷ்ணன்(35) 6 பேரை கைது போலீசார் செய்தனர்.
விசாரணையில், விவசாயி ரங்கசாமி தனக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். அதனை வாங்க முன் வந்த சண்முகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ரங்கசாமி, இடத்தை எழுதிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். தற்போது நிலத்தின் மதிப்பு அதிகமாகி விட்டது எனவே, கூடுதல் விலை வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை கடத்தி சென்று மிரட்டி எழுதி வாங்க முடிவு செய்தது தெரிய வந்தது. இதில், சதாசிவம். ஈஸ்வரன், ஸ்டாலின் ஆகியோர் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கும், பாஸ்கரன் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான சண்முகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
The post திருப்பூர் அருகே விவசாயியை காரில் கடத்திய கும்பல் கைது appeared first on Dinakaran.