கோபி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது

கோபி : கோபி அருகே உள்ள கே.என்.பாளையம் நரசாபுரத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோபி அருகே உள்ள பங்களாபுதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கே.என்.பாளையம் நரசாபுரத்தில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக, பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையத்தில், பூங்கருப்பன் (70), என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். வீட்டின் பின் பகுதியில் சுமார் 10 அடி உயரத்தில் 3 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், பூங்கருப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கோபி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: