இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் காலை முதலே பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மயிலாப்பூர், மந்தைவெளி, சைதாப்பேட்டை, கிண்டி ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.