சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், எதிரி Patrick Hopman என்பவரின் Travel History-ன் படி அவர் லண்டன் தப்பி சென்றுள்ளார் என்பது தெரியவந்தால் எதிரிக்கு Look Out Circular மற்றும் Red Corner Notice வழங்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி Robert என்பவர், புகார்தாரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர்களை ஏமாற்றும் நோக்கில் மேலாளார் Patrick Hopman என்பவருக்கு உடந்தையாக இருந்து எதிரி பெயரில் வங்கி கணக்குளை துவங்கி அதன் மூலம் Rs.3,70,33,000/- பணப்பரிமாற்றம் செய்து புகார்தரருக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவருகிறது. அதன்பேரில், மேற்படி மோசடிக்கு உடந்தையாக இருந்த சென்னையை சேர்ந்த எதிரி Robert என்பவர் 17.05.2024 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து திரு.பாட்ரிக் ஹாப்மேன் என்பவருடன் பணியாற்றிய கார்த்திக் என்பவரிடம் வங்கி இன்னும் பணபரிவர்த்தனை இலக்கை அடையவில்லை, எனவே வங்கி கணக்கு துவங்க ஆட்கள் யாராவது ஏற்பாடு செய்யுங்கள் தனது பணத்தை Deposit செய்து கணக்கு காட்டலாம் என்று கூறியுள்ளார்.
எதிரி -1 Mr. Patrick Hopman கீழ் அதே வங்கியில் வேலை செய்யும் 1.கார்த்திக் 2.செந்தில் என்பவரின் உதவியுடன் ஐந்து நபர்களுக்கு வங்கி கணக்கு துவங்கியுள்ளார். எதிரி மோசடி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு மேற்படி ஐந்து வங்கி கணக்குகள் தொடங்கி வாதியிடம் மோசடி செய்த தொகையிலிருந்து ரூ.36,00,000/- லட்சத்தை Deposit செய்து கணக்காளர்களிடமிருந்து சுய கையொப்பமிட்ட காசோலைகளை (Self Cheque) பெற்று ரூ.36.00,000/ லட்சத்தை கையாடல் செய்து Commission பெற்றுள்ளனர். இதனை அடுத்து எதிரிகளான முன்னாள் Yes Bank ஊழியர்கள் 1.கார்த்திக், வ/32, த/பெ.சௌந்தராஜன், திருப்பத்தூர் மாவட்டம் 2.செந்தில்குமார் வ/41, த/பெ.சங்கர நாராயணன், முகப்பேர், சென்னை ஆகியோர்களை 08.12.2024 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி மோசடி கும்பலை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு, காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
The post வங்கி வாடிக்கையாளர் பணம் ரூ.7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் Yes Bank ஊழியர்கள் கைது! appeared first on Dinakaran.
