கீழபெருமழை கிராமத்தில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்

*பொதுமக்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த கீழபெருமழை கிராமத்தில் மேலபெருமழை கிராமம் பிரியும் பாண்டி – இடும்பாவனம் சாலையில் பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது. சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது.

இந்த நிழற்கட்டிடத்திற்கு வந்துதான் கீழபெருமழை மக்கள் மட்டுமின்றி சுற்று பகுதி கிராம மக்கள் வெளியூர் பயணங்களை மேற்க்கொண்டு வருகின்றனர். அதேபோல் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஒருபுறம் விலாங்காடு, இடும்பாவனம், கரையங்காடு, தில்லைவிளாகம், துளைசியாபட்டினன், வாய்மேடு, வேதாரண்யம் போன்ற பகுதிக்கும் மறுபுறம் குன்னலூர், எக்கல், பாண்டி, எடையூர், கல்லுக்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த பயணிகள் நிழற்கட்டிடம் பயனடைந்து வந்தது.

இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பயணிகள் நிழற்கட்டிடத்தின் சுற்றிலும் கருவேல மரங்கள் மண்டியுள்ளது தேவையில்லாத செடிகொடிகள் படர்ந்துள்ளது. இதன் காரணமாக மேல் சிலாப் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் பழுதடைந்துள்ளது.

கட்டிட சுவர்களும் சேதமாகி காணப்படுகிறது. மேலும் உள்ளே மக்கள் அமரும் இடமும் அசுத்தமாக உள்ளது. இதனால் மக்கள் இதற்குள் வந்து அமராமல் சாலையில் கால்கடுக்க நின்று தான் பேரூந்து ஏறிவருகின்றனர் வெயில் காலத்தில் வெயில் நின்றும் மழைக்காலத்தில் மழையில் நனைந்தும் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் அதிகாரிகளும் முன்வராத நிலையில் அந்த கட்டிடம் அதே நிலையில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து இந்த பழுதடைந்த இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். இதன் சுற்றிலும் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கீழபெருமழை கிராமத்தில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: