கோவை சூலூரில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே மகளிர் சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய ட்ரஸ்டுகள் மற்றும் வங்கிகளில் இருந்து குறைந்த அளவு வட்டிக்கு பணம் பெற்றுத்தரப்படும் என ஆசை வார்த்தை கூறி அன்பழகன் என்ற நபர் மோசடி செய்துள்ளார்.

மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரிடம் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து அதிகளவில் பணத்தை பெற்றுள்ளார். பின்னர் பணம் வழங்கியவர்களிடம், உங்களுக்கான பணம் வந்துவிட்டது, முதற்கட்டமாக 50பைசா வட்டி பின்னர் எங்களுக்கான கமிஷன் கொடுத்துவிட வேண்டும் எனக்கூறி ஒரு பணப்பெட்டியை கொடுத்துள்ளார்.

பணத்தை பெறுவதற்காக அப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் சில நோட்டுகள் பணமாகவும் மற்றவை வெறும் வெள்ளை தாள்களாக இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட அன்பழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட விஜயா என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The post கோவை சூலூரில் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: