8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாவுக்கு அளித்த பதிலிலும் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனாலும், அவர்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: