ஆறுமுகநேரி, டிச. 8: ஆறுமுகநேரி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நடந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ரவிச்சந்திரன், முன்னிலை வகித்த அவைத்தலைவர் கனகராஜ், முன்னாள் செயலாளர்கள் அமிர்தாஜ், பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் ஏ.கே.எல் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மனோகரன், கவுன்சிலர்கள் தயாவதி, சிவகுமார், மற்றும் நிர்வாகிகள் தூசி முத்து, தர், மோகன் பலர் கலந்து கொண்டனர்.
The post ஆறுமுகநேரியில் ஜெயலலிதா நினைவு தினம் appeared first on Dinakaran.