இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. இந்த புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
The post வேட்பு மனுவில் தகவல் மறைப்பு வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.