ஜன் லோக்பால் போராட்டத்தின் மூலம் டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஊழல் எதிர்ப்பு குறைதீர் ஆணையமான ஜன்லோக்பாலை அமைக்க அக்கட்சி தவறிவிட்டது. நாடு முழுவதும் யாரேனும் மோசடி மன்னன் ஒருவர் இருந்தால் அது கெஜ்ரிவால்தான். அதனால்தான் அவரது அரசு மீதும், ஒன்றிய பாஜ அரசு மீதும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம். பஞ்சாபில் கூட ஜன்லோக்பால் ஏன் அமைக்கப்படவில்லை.
டெல்லியில் துணைநிலை ஆளுநர் உங்களை ஜன் லோக்பால் கொண்டு வர அனுமதிக்கவில்லை என்றால், அதை பஞ்சாபில் அமைக்க வேண்டியதுதானே? ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் லோக்பால் கொண்டு வருவதாக கூறி உருவாக்கப்பட்டது. இப்போது அதை மறந்து விட்டார்கள். லண்டனை போல் டெல்லியை ஆக்குவோம் என்றும் கூறினர். தற்போது தேசிய தலைநகரை மாசுபடுத்துவதில் முதலிடமாக உருவாக்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஒரு தவறு.
அதை சரிசெய்ய வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து. டெல்லியின் அவல நிலைக்கும், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததற்கும் 2013ல் 40 நாட்கள் நீடித்த ஆம் ஆத்மி அரசை நாங்கள் ஆதரித்ததுதான் என்பதை உணர்கிறேன். மேலும், டெல்லியில் முன்பு கூட்டணி அமைத்ததன் மூலம் மீண்டும் ஒரு தவறு நடந்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன், அதை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post டெல்லியில் ஆம் ஆத்மியுடன் காங். கூட்டணி அமைத்தது தவறு: அஜய் மாக்கன் சொல்கிறார் appeared first on Dinakaran.