கோபி, டிச.8: கோபி அருகே உள்ள தொட்டகோம்பை மலை கிராமத்தில் 10 குடும்பங்களுக்கு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டகோம்பை மலை கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட மலை வாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தொட்ட கோம்பை மலை கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரும்பாறையில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர்.
இவர்களில் 10 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு இல்லாத நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்க விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது விண்ணப்பத்தினை பரிசீலனை செய்த கோபி சிவில் சப்ளை தாசில்தார் வெங்கடேஷ், 10 குடும்பங்களுக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து 10 குடும்பங்களுக்கும் புதிய ரேஷன் கார்டு தயாரானது.இந்நிலையில், தொட்டகோம்பையில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி கோபி சிவில் சப்ளை தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 குடும்பங்களுக்கும் புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.
இதில், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், கோபி சிவில் சப்ளை தாலுகா அலுவலக சீனியர் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ரெஜிக்குமார், விஏஓ சங்கர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கோபி அருகே தொட்டகோம்பை மலை கிராம மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு appeared first on Dinakaran.