இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய அனைத்து படகுகளை மீட்கவும் வலியுறுத்தி தங்கச்சிமடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கை குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். மேலும், ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு கண்டனம்: அனைத்து படகுகளை மீட்கவும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.