விமர்சனங்கள் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைக்கப்பட்டது.திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், விமர்சனங்களை புறக்கணிப்பது எங்கள் நோக்கம் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், சமீப காலங்களில் சில ஊடகங்கள் வன்மத்துடன் சில படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனிமனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடகங்களுக்கும் எதிரானது அல்ல. அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான் இந்த முடிவு.தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கும் பத்திரிகை, யூ-டியூப் சேனல்கள், சோசியல் மீடியா Influencer-கள், Press Showவுக்கு வந்து திரைப்படங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
The post விமர்சனங்களை புறக்கணிப்பது எங்கள் நோக்கம் இல்லை: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் appeared first on Dinakaran.