ரகானேவிடம் `மாஸ்டர்’ படம் பார்க்க பரிந்துரைத்த அஸ்வின்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக உள்நாட்டில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. முதல் டெஸ்ட் சென்னையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வீரர்கள் சென்னை வந்துவிட்டனர். வலைப் பயிற்சி ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்திய அணியினர் அவரவரது குடும்பங்களுடன் நேரம் செலவிட்டு, ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் உரையாடியும் வருகின்றனர்.இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் தலைமை வகித்த ரகானே, ரசிகர்களிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் உரையாட ஆரம்பித்தார்.அப்போது ஒரு ரசிகர், “சென்னை வரும் உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஏதாவது தமிழ்த் திரைப்படம் அல்லது தொடரைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.இதற்கு பதிலளித்த ரகானே, “ஆம், சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தை சப்டைட்டில் உதவியுடன் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. நடிகர் சூர்யா அற்புதமாக நடித்திருந்தார். இதைச் சொல்லும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. வேறு ஏதாவது திரைப்படம் பரிந்துரை இருக்கிறதா” என்று நமது ஸ்பின்னர் அஸ்வினிடம் கேட்டார்.இதற்கு அஸ்வின், `நீங்கள் ஏன் ‘மாஸ்டர்’ பார்க்கக் கூடாது? அதை பாருங்கள்’ என்று பரிந்துரை செய்தார்.இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் தமிழ்த் திரைப்படங்களைச் சக வீரர்களுக்கு அறிமுகம் செய்துவரும் அஸ்வினுக்கும் வலைதளங்களில் பாராட்டுகள் நிரம்பி வழிகின்றன….

The post ரகானேவிடம் `மாஸ்டர்’ படம் பார்க்க பரிந்துரைத்த அஸ்வின் appeared first on Dinakaran.

Related Stories: