துளிகள்

* சாம்பின்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வந்து விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணியை விட இந்தியா அணி மிகவும் விரும்புகிறது. பாகிஸ்தானில் விளையாட விராட் கோலி விரும்புகிறார். ஆனால் அரசாங்கத்தின் காரணமாகவே அவர்கள் வர மறுக்கிறார்கள் என ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.
* சிங்கப்பூரில் 2024ம் ஆண்டிற்கான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், நடப்பு சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரென்-இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடையே நடந்து வருகிறது. நேற்று நடந்த 9வது சுற்று டிராவில் முடிந்தது. இதன் மூலம் இருவரும் 4.5 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளனர். இன்னும் 3 புள்ளிகளை பெறுபவர் உலக சாம்பியன் ஆவார். நாளை 10வது சுற்று நடக்கிறது.
* ஜிம்பாப்வே அணியுடன் 3 டி20 தொடரில் 2 போட்டிகள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி நேற்று கடைசி சம்பிரதாய போட்டியில் விளையாடியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

The post துளிகள் appeared first on Dinakaran.

Related Stories: