* இப்போட்டி 2002-03ம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. அந்த ஆண்டு முதல் கோப்பையை தமிழ்நாடு தான் வென்றது.
* தொடர்ந்து 2004-05ம் ஆண்டு வெற்றிக் கோப்பையை உத்தரபிரதேசத்துடன் பகிர்ந்துக் கெண்டது.
* தமிழ்நாடு 2008-09, 2009-10 ஆண்டுகளில் தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பையை வசப்படுத்தியது.
* தமிழ்நாடு 2017-18ம் ஆண்டு மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.
* விஜய் ஹசாரே கோப்பையை அதிக முறை(5) வென்ற அணியாக தமிழ்நாடு திகழ்கிறது.
* இவை தவிர 2019-20, 2021-22ம் ஆண்டுகளில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
* தமிழ்நாடு அணி கடந்த ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியது. அதில் நடப்பு சாம்பியன் அரியானாவிடம் 63 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
* தமிழ்நாடு அணி
சாய் கிஷோர்(கேப்டன்), நாரயண் ஜெகதீசன்(து.கேப்டன்), பாபா இந்தரஜித், ஆந்த்ரே சித்தார்த், ஷாருக்கான், முகமது அலி, தீபேஷ், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர், அஜித் ராம், அச்யூத், பிரணவ் ராகவேந்திரா பூபதி வைஷ்ணவ குமார், துஷார் ரஹேஜா, சந்தீப் வாரியர், பிரதோஷ் ரஞ்சன் பால்.
* புதுச்சேரி அணி
ஒன்றிய மாநிலமான புதுச்சேரி அணி அருண் கார்த்திக் தலைமையில் சி பிரிவில் களம் காண உள்ளது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள 23 பேரில், அருண் கார்த்திக், ஜெய்சுந்தரம் கார்த்திகேயன், பிரேம்ராஜ் ராஜ்வேலு, மாரிமுத்து விக்னேஷ்வரன், சிவமுருகன் முருகையன் என சில தமிழ்நாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் ஒரிருவருக்கு மட்டுமே ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கும். விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியுடன் புதுச்சேரி மோத உள்ளது.
The post ஒரு நாள் தொடர் துவக்கம் தமிழ்நாடும்… ஹசாரே கோப்பையும்! சண்டீகருடன் இன்று மோதல் appeared first on Dinakaran.