சென்னை : தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தருமம் எனச் செயல்படுவோம்! அனைவருக்கும் துணை நிற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “மாற்றுத் திறனாளர்களுக்குத் தேவையான இயன்முறை மருத்துவம் (Physiotherapy), கேட்டல் மற்றும் பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகளை வழங்கும் விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தி, புறவுலகச் சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மைய சேவைகள் உள்ளிட்டவற்றைத் தொடங்கி வைத்தேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தருமம் எனச் செயல்படுவோம்! அனைவருக்கும் துணை நிற்போம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.