விஜயால் களத்தில் நிற்க முடியாது. பிரச்னை இருக்கிறது.. உதவி செய்யும் எண்ணமே போதும் : சீமான் பாராட்டு!!

திருப்பூர் : தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை பாராட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், “பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. அப்படி எனில் எதற்கு வரி கட்ட வேண்டும்?. மத்திய அரசுக்கான நிதி எங்கிருந்து வருகிறது? மாநில அரசுகள்தானே கொடுக்கின்றன. தானே, ஒகி என எந்தப் புயலுக்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. தமிழகம் மட்டும் ஏன் நிதி கொடுக்க வேண்டும்? தர முடியாது என்று சொன்னால் என்ன செய்வார்கள்?.

பேரிடர் காலங்களில் நிதியை பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லண்டன் சென்று படித்து வந்த பிறகு அண்ணாமலை பேச்சில் முதிர்ச்சி, நிதானம் உள்ளது. நாதக அதிருப்தியாளர்கள் ஒன்றிணைவதில் எங்களுக்கு திருப்திதான். விஜயால் களத்தில் நிற்க முடியாது. பிரச்னை இருக்கிறது.அவர் களத்திற்கு போனால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டத்தை விட, அவரை பார்க்க வேண்டும் என்ற கூட்டம் அதிகமாக வந்துவிடும். அந்த பிரச்னையை வேறு சமாளிக்க வேண்டும். விஜய்க்கு நேரில் அழைத்தாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே அதுவே போதும் . அதை பாராட்ட வேண்டும்.நான் 7 மற்றும் 8ம் தேதிகளில் களத்திற்கு செல்ல இருக்கிறேன்.”என்றார். முன்னதாக ஃபெஞ்சல் புயல் மற்றம் கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களை தவெக தலைமை அலுவலகமான பனையூருக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.

The post விஜயால் களத்தில் நிற்க முடியாது. பிரச்னை இருக்கிறது.. உதவி செய்யும் எண்ணமே போதும் : சீமான் பாராட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: