உதாரணத்திற்கு, எனது மாவட்டத்திலேயே அம்மாபாளையத்தில் – நாகநதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலமும், படவேடு – ராமர் கோயில் சாலையில் கமண்டலநதி மேல் கட்டப்பட்ட பாலமும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதை மாவட்ட மக்கள் மறவமாட்டார்கள். ஆனால், இதையெல்லாம் மறந்து எதிர்க்கட்சி தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார். பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் பெய்த அதீத கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட 4 மடங்கு அதிகமாக அதாவது 1,75,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர் மழையினால் கீழ்ப்பகுதியில் பாம்பாறு, வரட்டாறு, நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும் மற்றும் குளங்களிள் நிரம்பி வெளியேறிய உபரிநீரும் மொத்தம் சேர்ந்து இப்பாலத்தில் அதிகப்படியான வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் பாலம் பெரும் சேதமடைந்தது. இந்த பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 54000 கன அடி தான். எதிர்பாராத பேரிடர் காரணமாக அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் பாலம் உடைபட்டது.
திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்ததாக கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும் தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் தரத்தை சோதிக்கின்றனர். முதலமைச்சராக நெடுஞ்சாலைத் துறையையும் பொறுப்பில் வைத்திருந்த எடப்பாடியாருக்கு இந்த ஆட்சியை குறை கூற எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விடியாத எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்தது உண்டு.
The post அகரம்பள்ளிப்பட்டு பாலத்தின் உறுதித்தன்மையை எப்போது வேண்டுமானாலும் வந்து எடப்பாடி ஆய்வு செய்யலாம்: அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு appeared first on Dinakaran.