சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு புயல் மழை வெள்ளத்தால் மக்கள், கால்நடைகள் அடைந்துள்ள பாதிப்புக்கு, உயிரிழப்புக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். ஆனால் அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு மழை வெள்ள புயல் பாதிப்பால் மிகவும் சிரமத்தில் இருக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக, முழுமையாக காலத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.