இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ‘‘இந்த வழக்கு என்பது அரசியல் உள்நோக்கம் மற்றும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விசாரணை பாதிக்கப்படுகிறது என்றால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடி இருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு எதுவும் தற்போது வரையில் செய்யவில்லை. இதுபோன்ற முகாந்திரம் இல்லாத மனுக்களால் அரசியல் ரீதியிலும் தனக்கு அழுத்தங்கள் உருவாகிறது. எனவே இதுபோன்ற மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவர் எப்படி அமைச்சரானார். குறிப்பாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உடனே அவர் அமைச்சராகி உள்ளார். இதனால் வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களுக்கு அழுத்தம் ஏற்படாதா?. செந்தில் பாலாஜிக்கு வாங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய முடியாது. இருப்பினும் இந்த மனு மீது நாங்கள் விசாரணை நடத்துவோம். அப்போது சாட்சியங்களுக்கு அவர் ஏதேனும் அழுத்தம் கொடுக்கிறாரா என்பது பரிசீலனை செய்யப்படும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: வரும் 13க்குள் விளக்கமளிக்க உத்தரவு appeared first on Dinakaran.