மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாகி 9 நாட்களாகியும் முதல்வர் பதவி யாருக்கு என்பது முடிவாகாததால் பாஜ தலைமையிலான புதிய கூட்டணி அரசு இதுவரை பதவியேற்கவில்லை. முதலில் முரண்டு பிடித்த தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பின்னர் பாஜ தேர்ந்தெடுக்கும் முதல்வருக்கு ஆதரவு அளிப்பதாக பின்வாங்கினார். இந்நிலையில், வரும் 5ம் தேதி மாலை மும்பையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று பாஜ நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், வரும் 4ம் தேதி மும்பையில் நடக்கும் பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நேற்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
The post மகாராஷ்டிரா புதிய முதல்வர் 4ம் தேதி தேர்வு: பாஜ அறிவிப்பு appeared first on Dinakaran.