உடனே, அங்கு விரைந்த தனிப்படையினர், அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது, 10 கிராம் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த சுனில் (எ) ஜெயபிராகாஷ் (30) என்றும், இவர் தனது நண்பரான பெங்களூரு கெம்பபுரா ஹெப்பல் முதல் குறுக்கு 1வது மெயின் ரோட்டில் வசித்து வரும் நைஜீரிய நாட்டை சேர்ந்த விக்டர் வேட் (31) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் மர்வர் பகுதியை சேர்ந்த புஷ்பேந்திரா சிங் (24) ஆகியோரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி, பிரபல பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
ஜெயபிரகாஷ் அளித்த தகவலின்படி பெங்களூருவில் இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த விக்டர் வேட் மற்றும் புஷ்பேந்திரா சிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 59 கிராம் மெத்தபெட்டமின் மற்றும் ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், மேற்கு மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் அருகே மெத்தபெட்டமின் விற்பனை செய்து வந்த பெங்களூரு பகுதியை சேர்ந்த நயிமுல்ஹக் (31), கோவை குனியமுத்தூர் எடையார்பாளையம் மின்வாரிய காலனியை சேர்ந்த நிர்மல் பிரின்ஸ் (35) ஆகியோரை அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டது.
The post அசோக் நகர், ராமாபுரம் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரியன் உள்பட 5 பேர் கைது: 70 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல் appeared first on Dinakaran.