ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்தது. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். மாநகராட்சி சார்பில் 2,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
வழக்கமாக அதிகளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, 5 மண்டலங்களிலும் அரசு பள்ளிகள், தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு 3 வேளை உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான பாய், பெட்ஷீட், தலையணை, தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பால், பிரட், பிஸ்கட் போன்ற உணவுப் உணவுப் பொருட்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஆகியோர் உடனுக்குடன் வழங்கினர்.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் இருந்த 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டது.
வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கியிருந்த பொதுமக்களுக்கும் மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.
மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேங்கிய மழைநீர் பெருமளவு வெளியேறி விட்டதால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இரவுக்குள் அனைவரும் வீட்டிற்கு சென்று விடுவார்கள். மாநகராட்சியை பொருத்தவரை மண்டலம் 3, 4, 5 பகுதிகளில் என அதிகபட்சம் 20 மரங்கள் மழையினால் விழுந்தது. அவற்றையும் உடனுக்குடன் அப்புறப் படுத்திவிட்டோம்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு வாகன போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை பரிசோதிக்க 7 மருத்துவ முகாம்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகிறது.
ஒரு மண்டலத்திற்கு தலா 4 மருத்துவ முகாம்கள் என 5 மண்டலங்களிலும் 20 மருத்துவ முகாம்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்படுகிறது. நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டுள்ளது,’’ என்றார்.
The post தாம்பரம் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் சிக்கிய 900க்கும் மேற்பட்டோர் மீட்பு appeared first on Dinakaran.