மெரினாவில் சூறைக்காற்றால் சரிந்த புற காவல் நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் இடையே உள்ள லூப் சாலை சந்திப்பில் மெரினா காவல் நிலையத்தில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த காவல் நிலையம், இரும்பு தூண்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெஞ்சல் புயல் மற்றும் கன மழை காரணமாக, இந்த புற காவல் நிலையம் முற்றிலும் சரிந்து விழுந்தது.

அங்கிருந்து காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அதைதொடர்ந்து சரிந்து விழுந்த புற காவல் நிலையத்தை மெரினா போலீசார் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் நேற்று காலை அப்புறப்படுத்தினர். மேலும் அதே இடத்தில் புதிதாக புற காவல் நிலையம் கான்கிரீட் தூண்களுடன் அமைப்பதற்கான பணிகளை மெரினா போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

The post மெரினாவில் சூறைக்காற்றால் சரிந்த புற காவல் நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: