இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த பணத்தில், ரூ.10 லட்சம் மற்றும் ஒன்றரை சவரன் நகை மாயமானது தெரிந்தது. ஆனால், வீட்டு கதவின் பூட்டு மற்றும் பீரோ பூட்டு ஏதும் உடைக்கப்படாமல், பணம், நகை மட்டும் திருடுபோயிருந்தது.
இதுகுறித்து லிண்ட்சே அருள்கனி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், வேலை செய்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வழக்கறிஞர் வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.