பல்வேறு மாநிலங்களிலும் அங்கீகரிக்காத நிலங்களில் உள்ள வக்பு சொத்துக்கள்: விவரம் கேட்கிறது நாடாளுமன்ற குழு

புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழுவின் பதவிக்காலம் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை மக்களவையால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குழு ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள வக்பு சொத்துக்களின் தற்போதைய நிலை மற்றும் உண்மைத்தன்மை குறித்த விவரங்களை டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மபி, உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிடம் கேட்டுள்ளது.

கடந்த 2005-06ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, மாநிலங்களில் அங்கீகரிக்கப்படாத நிலங்கள் வக்பு வாரியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதன் தற்போதைய நிலையை ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து நாடாளுமன்ற குழு கேட்டுள்ளது.

The post பல்வேறு மாநிலங்களிலும் அங்கீகரிக்காத நிலங்களில் உள்ள வக்பு சொத்துக்கள்: விவரம் கேட்கிறது நாடாளுமன்ற குழு appeared first on Dinakaran.

Related Stories: