இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அதே போல் கடந்த மாதம் 16-ந்தேதி மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் நேற்று போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post மணிப்பூரில் போலீஸ் நிலையம் மீது மர்ம கும்பல் தாக்குதல்.! தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.