கோவை, நவ. 30: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 13 வயது மகளுக்கு சென்டிரிங் தொழிலாளியான இவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடந்த 2021ம் ஆண்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு மீதான தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமியின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
The post மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.