இப்பகுதி, மீனவர்கள் தினமும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, தற்காலிக புயலாக மாறி வலுவிழந்து காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2 நாட்களாக மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார மீனவ குப்பங்களில் சுமார் 7 அடி உயரத்துக்கு எழும்பி கரையை நோக்கி வேகமாக வந்தது. இந்நிலையில், நேற்று மாலை 3 மணி முதல் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத வகையில், சுமார் 15 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி, கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்தன. இதனால், கரை பகுதியை தாண்டி, 50 மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்துள்ளது. இதனால், அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், 2 நாட்களாக கடலுக்கு செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, மாமல்லபுரத்தை பொறுத்தவரை 20 முதல் 30 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
The post பெங்கல் புயல் எதிரொலியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் மீனவர்கள் வேதனை: நிவாரணம் வழங்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.