புயல் எதிரொலியாக சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் பலத்த மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
The post சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்: 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.