பூனாம்பாளையத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முன்னேற்ற குழு கூட்டம்

சமயபுரம், நவ.28: மண்ணச்சநல்லூர் வட்டம் பூனாம்பாளையம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் வட்டாரம் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் 2024-25 நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பூனாம்பாளையம் கிராமத்தில் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சிந்தியா வரவேற்றார். மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமை வகித்து திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும் ராபி முன் பருவ பயிற்சியினை வழங்கினார்.

விதை சான்று மற்றும் விதை பண்ணை அமைப்பது குறித்து உதவி விதைஅலுவலர் துரை சங்கர் எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுப்பொருட்கள் தார்பாய், பண்ணை உபகரணங்கள் தொகுப்பு பேட்டரி தெளிப்பான் மானியங்கள் குறித்து உரை ஆற்றினார். விதை இருப்பு மற்றும் விதைப்பு முறைகளை பற்றி கூறினார். தோட்டக்கலை அலுவலர் அகிலா காய்கறி பயிரில் பயிர் பாதுகாப்பு பற்றியும் தோட்டக்கலை துறையில் செயல்படும் முக்கிய திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். நுண்ணீர் பாசனம் பழக்கன்றுகள், காளான் வளர்ப்பு திட்டத்தின் மானியத்தை எடுத்துக் கூறினார். இறுதியில் உதவி தொழில் நுட்ப மேலாளர் ஹர்ஷினி நன்றி உரை கூறினார்.

The post பூனாம்பாளையத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முன்னேற்ற குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: