தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு

பாடாலூர், நவ. 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒப்பந்த தொழிலாளி நேற்று மயக்கமடைந்து உயிரிழந்தார். ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பிச்சை (52). இவர் நாரணமங்கலத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மயக்கமடைந்தார். உடனடியாக அவருக்கு அருகில் இருந்தவர்கள் முதலுதவி அளித்து சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: