நிலப்பிரச்னையில் 11 பேர் மீது வழக்கு

நிலக்கோட்டை, நவ. 27: நிலக்கோட்டையை அருகே விளாம்பட்டி கிராமத்தில் கண்ணன், அருண்குமார் ஆகிய இரு தரப்பிற்கும் நிலம் தொடர்பான அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்று முன்தினம் இருதரப்பிற்குமிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதுகுறித்த புகார்களின் பேரில் விளாம்பட்டி எஸ்ஐ நீலமேகம் மற்றும் போலீசார் கண்ணன் தரப்பில் கண்ணன், மணிமாலா, ராஜா ஆகியோர் மற்றும் அருண்குமார் தரப்பில் அருண்குமார், பாண்டி, தேவி, காக்கப்பண், கல்லணை, வள்ளான், மாரிமுத்து, முத்துச்சாமி ஆகியோர் என மொத்தம் 11 பேர் மீது மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் போலீசார் இரண்டாம் வகுப்பு நடுவர் நிர்வாகவியல் (தாசில்தார் தலைமையில்) துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

The post நிலப்பிரச்னையில் 11 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: