சேலம் அரசு மருத்துவமனையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

சேலம், நவ.27: ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ம்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று 75வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன்படி, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையின் டீன் தேவிமீனாள் தலைமை வகித்து, இந்திய அரசியமைப்பு முகப்புரையை வாசிக்க அனைத்து மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், ஆர்எம்ஓ லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி appeared first on Dinakaran.

Related Stories: