மன்னார்குடி, நவ. 27: திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக மன்னார்குடி ஹரித்ராநதி தெப் பக்குளத்தில் ரூ 50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட படகு இல்லத்தை தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான ஹரித்ராநதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்பாட்டில் இந்த குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ரூ.40 லட்சம் மதிப்பில் ஏற்கனவே அலங்கார தடுப்பு வேலிகள் அமைத்து நடைபாதைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தெப்பக்குளத்தில் படகு இல்லம் ஒன்றை அமைத்துத் தருமாறு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தொடர்ந்து விடுத்த கோரி க்கையை ஏற்று தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்பேரில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி தெப்பக்குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு நிறைவடைந்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த விழா ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட படகு இல்லத்தை மக்கள் பயன்பாட்டிற்கு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து, மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி ஆணையர் சியாமளா, நகர திமுக செயலாளர் வீரா கணேசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக சென்னை மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, நகர் மன்ற துணைத் தலைவர் கைலாசம், நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சோம செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய படகு இல்லத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
விழாவில், ராஜா கோபால சுவாமி கோயில் செயல் அலுவலர் மாதவன், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண் டனர். திருவாரூர் மாவட்டத்திலேயே முதல்முறையாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு இல்லம் அமைக்க உரிய நிதி ஒதுக்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், தொடர் முயற்சிகள் மேற்கொண்ட தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு இல்லம்: முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.