வழக்கை அறுக்கும் வழக்கறுத்தீஸ்வரர்

நவகிரகங்களை படைத்தது இறைவன் என்றாலும் அந்த இறைவனும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் இருப்பான். கிரகங்களின் இயக்கங்களின் பலன்கள் இந்த பிரபஞ்சத்தில் யாரையும் விட்டுவைக்காது என்பதுவே நிதர்சனமான உண்மை. அவ்வகையில் கிரகங்களை பற்றியும் அதற்கான கோயில்களை பற்றியும் தெளிவாக அறிந்து கொண்டு அதற்கான கோயில்களில் முறையான வழிபாடு நிச்சயமாக வெற்றியைத் தரும்.இதை நாம் அறியும் ஸ்தலம் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆவார். ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தது தேவர்களுக்கு துணையாக திருமால் நின்று போர் செய்தார் அசுரர்கள் பயந்து ஓடி பிருகு முனிவரின் மனைவியும் லட்சுமியின் தாயுமான கியாதி இடத்தில் தஞ்சம் புகுந்தனர். திருமால் சினம் கொண்டு தன் மாமியார் என்று பாராமல் தலையை கொய்தார். அசுரர்களை வதம் செய்தார். இதைக் கண்டு பிருகு முனிவர் திருமாலைப் பார்த்து பத்து பிறப்புகள் எடுத்து இவ்வுலகில் உழலுமாறு சபித்துவிட்டார். மேலும் பிருகு முனிவர் சுக்கிரன் துணை கொண்டு தன் மனைவியை உயிர் பெறச் செய்தார்.

திருமால் மனம் வருந்தி காஞ்சிக்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு பரிகாரம் வேண்டி நின்றார். திருமகளுக்கு பிருகு முனிவர் சபித்த பத்து பத்து பிறப்புகளும் உலகத்திற்கு உபகாரமாக ஆகுமாறு அருள் செய்து பிருகு முனிவரின் சாபத்தினால் அறிவடைந்த பயத்தை போக்கி அருளினார். இதனாலையே எம்மூர்த்திக்கு ஹரிசாப பயம் தீர்த்த பெருமான் எனத் திருநாமம் கொண்டு விளங்குகிறார். இந்த தெய்வத்துக்கு எந்த கிரகம் பெயர் கொடுத்திருக்கிறது சூரியன்-சனி-புதன்-சந்திரன் இந்த கிரகம் இந்த தெய்வத்திற்கு பெயர் கொடுத்திருக்கிறது. வம்பு வழக்கு பிரச்னை உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் வழக்குகளில் வெற்றி பெறலாம்.

பன்னீர் அபிஷேகம் செய்து பன்னீர் சிறிது வாங்கி வந்து வீட்டில் தெளித்து விட்டால் வழக்குகளில் வெற்றி பெறலாம். சொத்து பிரச்னை உள்ளவர்கள் சொத்தில் வழக்கு உள்ளவர்கள் இக்கோயிலில் கங்கா தீர்த்தம் அபிஷேகம் செய்து அந்த சொத்து இருக்கும் இடத்தில் தெளித்து விட்டால் சொத்து பிரச்னை விரைவில் முடிவடையும். ஐடி ஊழியர்கள் வேலையில் பிரச்னை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து பன்னீர் அல்லது மழை நீர் அபிஷேகம் செய்தால் வேலையில் இருக்கும் பிரச்னை தீரும்.

தனிப்பட்ட இருவருக்கு ஏதேனும் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தாலும் செய்த தப்பை உணர்ந்து கோயிலுக்கு வந்து சென்றால் இருவரும் ஒன்று சேருவார்கள். விவாகரத்து வரை சென்று இருக்கும் கணவன் மனைவி பிரச்னைக்கு இக் கோவிலில் கோதுமை மாவு ரொட்டி நல்லெண்ணெயில் சுட்டு இக்கோயிலில் நெய்வேத்தியமாக வைத்து நெய்வேத்தியம் செய்து கருப்பு நிற பசுக்கோ இல்ல கருப்பு நிற நாய்க்கு உணவாக கொடுத்தால் விவாகரத்து நின்றுவிடும். இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். பூர்வீக சொத்து வழக்கில் உள்ளவர்கள் கோதுமை மாவை நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து 18 உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதை கோயிலுக்கு நெய்வேத்தியம் பண்ணி ஓடும் நீரில் விட்டு விட்டால் பூர்வீக சொத்து பிரச்னை வழக்கிலிருந்து விடுபடும்.

 

The post வழக்கை அறுக்கும் வழக்கறுத்தீஸ்வரர் appeared first on Dinakaran.

Related Stories: