ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் ஆளுநர் அழைப்பு ஹேமந்த் சோரன் 28ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டபேரவைக்கு நடந்த தேர்தலில், ஜேஎம்எம்,காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி 56 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த நிலையில்,நேற்று ராஞ்சியில் இந்தியா கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. இதில், ஹேமந்த் சோரன் ஒருமனதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் ஆளுநர் சந்தோஷ்குமார் கங்க்வாரை சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான உரிமை கோரினார்.

அப்போது ஆளுநர் சந்தோஷ்குமார் கங்க்வார், வரும் 28ம் தேதி பதவியேற்க வரும்படி சோரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநருடனான சந்திப்புக்கு பின்னர் ஹேமந்த் சோரன் கூறுகையில்,‘‘ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். 28ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும்’’ என்றார்.

The post ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் ஆளுநர் அழைப்பு ஹேமந்த் சோரன் 28ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: