மேலும், தமிழ்நாடு பக்தர்களுக்கு உதவும் வகையில், அறநிலையத்துறை சார்பில் 2 உயர் அதிகாரிகள் சபரிமலை கோயிலுக்கு செல்ல உள்ளனர். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 2 ஆண்டுகளாக மலர் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 25ம் தேதி மலர் பூஜை மயிலாப்பூரில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சபரிமலைக்கு 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தாண்டு, முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்களும், 2000 எண்ணிக்கையிலான ஒரு லிட்டர் பிளாஸ்க்கும் அனுப்பப்படுகிறது. சபரிமலை ஐயப்ப கோயிலில் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்களுக்கு விடுதி கட்டும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், அமைச்சர் பொன்முடி சுட்டிக்காட்டியதில் ஏதேனும் குறை இருப்பின் சரி செய்யப்படும்.
பாஜவின் எச்.ராஜா எந்த மாநிலத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுவரை சுமார் 6,883 கோடி அளவிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன, என்பதை அவர் மறைக்க முற்படுகிறார். அன்று நடந்த சம்பவம் மிகுந்த துயரமான சம்பவம். அந்த சம்பவத்திற்கு பிறகு யானை அந்த பாகனை தட்டி தட்டி எழுப்பியது. பிறகு அந்த யானையை குளிக்க அழைந்து செல்லும் போது ஆனந்தமாக குளித்து மகிழ்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறமால் வருங்காலங்களில் தடுக்கப்படும். 28 யானைகள் 27 கோயில்களில் இருக்கின்றன. 28 யானைகளுக்கும் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் கோயிலுக்கு வந்து யானைகளை பரிசோதனையும் மேற்கொள்கிறார். கோயில் யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.
அதே திருச்செந்தூர் கோயிலில் அவர்களின் குடும்பத்தை சார்ந்த நபருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க முதலவர் உத்திரவிட்டுள்ளார். கோயில்களில் உள்ள யானைகள், வனத்துறை அனுமதி பெறாமல் இருக்கக்கூடிய யானைகளுக்கு அனுமதி பெறப்படும். மதுரை மீனாட்சி கோயிலில் உள்ள யானையை காப்பாற்ற டென்மார்க்கில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தோம். அனைத்து கோயில்களிலும் செல்போன் கொண்டு செல்ல தடை கொண்டு வரப்படும். தமிழ்நாடு அரசு ஆன்மிகத்திற்கு எதிராக உள்ளது என பரப்புரை செய்வதற்காக சில சங்கிகளே திட்டமிட்டு இந்து சமய அறநிலையத்துறை குறித்து அவதூறு பரப்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அதிகாரிகள், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டல குழுத்தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் நாகராஜ், அறங்காவலர் குழு தலைவர் உமா மோகன், மாமன்ற உறுப்பினர்கள் நாகவள்ளி, ராஜகோபால், உமா சந்தானம், கமல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்: அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.