மாநகர் போக்குவரத்துக்கழக கண்டக்டர்களுக்கு யுபிஐ, டெபிட் கார்டு மூலம் பயணச்சீட்டு வழங்க பயிற்சி

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த பிப்.28ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக அனைத்துப் பேருந்துகளிலும் நடைமுறைப்பட்டு, தற்பொழுது மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவிகளின் வாயிலாக மட்டுமே பயணசீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியிலுள்ள யுபிஐ மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் பயணசீட்டு வழங்குவது குறைவாக உள்ளதால், இதனை அதிகரிக்கும் நோக்கில் நடத்துனர்களிடையே இது தொடர்பான செயல் விளக்கப் பயிற்சி வழங்க ஏதுவாக, அனைத்து அலுவலர்களும் கடந்த 2 நாட்கள் நவ.22 மற்றும் 23 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, 20 முக்கிய பேருந்து நிலையங்களில் அனைத்து நடத்துனர்களுக்கும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியிலுள்ள யுபிஐ மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் பயணசீட்டு வழங்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், 20 முக்கிய பேருந்து நிலையங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவ.22ம் தேதி மட்டும் 1,150 நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து நடத்துனர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியிலுள்ள யுபிஐ மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறையை செவ்வனே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post மாநகர் போக்குவரத்துக்கழக கண்டக்டர்களுக்கு யுபிஐ, டெபிட் கார்டு மூலம் பயணச்சீட்டு வழங்க பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: