தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு: ஒன்றிய அரசுக்கு சு வெங்கடேசன் கண்டனம்

மதுரை: பொங்கல் திருநாளன்று பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டய கணக்காளர் எனப்படும் சிஏ தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வரும் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கலான உழவர் திருநாளும் 16ஆம் தேதி திருவள்ளூர் தினம் ஆகியவை தொடர்ந்து கொண்டாடப்பட உள்ளது.

தமிழர்களின் பெரிய பண்டிகையாக இந்த பாரம்பரிய பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நாளில் மத்திய அரசு சிஏ தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர் பண்பாட்டை அவமதிக்கும் செயலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக எம்பி சு வெங்கடேசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச்சருக்கும், ICAI தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், “சி ஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

The post தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு: ஒன்றிய அரசுக்கு சு வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: