கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தேனி, கம்பம், திருச்செந்தூர், கடலூர், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வருகிறது. சீசன் முடிந்துவிட்ட நிலையில், இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் 50 ரூபாயில் இருந்து 250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், ‘’மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது. தை மாதம் அன்று முருங்கைக்காய் சீசன் தொடங்குவதால் அப்போது விலை படிப்படியாக குறையும்’ என்றார்.

பூக்கள் விலை சரிந்தது; விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்றுகாலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிலோ மல்லி 1,200 லிருந்து 1000 க்கும் ஐஸ் மல்லி 1000 லிருந்து 900 க்கும் முல்லை மற்றும் ஜாதி மல்லி 700 லிருந்து 600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் 1000 ரூபாயில் இருந்து 800 க்கும் அரளி பூ 250 லிருந்து 200 க்கும் சாமந்தி 180 லிருந்து 120 க்கும் சம்பங்கி 200 லிருந்து 150 க்கும் பன்னீர்ரோஸ் 140 லிருந்து 120 க்கும் சாக்லேட் ரோஸ் 190 லிருந்து 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250 appeared first on Dinakaran.

Related Stories: