இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. இந்த, ஆர்ப்பாட்டத்தில் திருப்போரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சரவணன், செயலாளர் அசோக்குமார், மூத்த வழக்கறிஞர்கள் சிவராமன், பத்மநாபன் ஆகியோர் தலைமையில், 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர்.
இதில், தமிழ்நாடு மாநிலத்தில் வழக்கறிஞர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வழக்கறிஞர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும், ஓசூர் வழக்கறிஞர் கண்ணனை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஓஎம்ஆர் சாலையில் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருப்போரூர் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post ஓசூர் வழக்கறிஞரை தாக்கியதை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.