இந்த, சிப்காட் பகுதியில் புதிய பொறியியல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புதிய பொறியியல் தொழில்நுட்ப மையத்தினை திறந்து வைத்தார். முன்னதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை சார்பில், துல்லிய உற்பத்தி பெருக்குழுமத்தால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இம்மையத்தில், முதல்கட்டமாக ரூ.18.18 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை.மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வந்தேமாதரம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரஸ்வதிமனோகரன், ஒன்றிய குழு துணை தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் ஹரி, ஒன்றிய கவுன்சிலர் லட்சாவதி கருணாகரன், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இ.மணி, துணை தலைவர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திமுடிவாக்கம் சிப்காட் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு, குன்றத்தூர் முதல் திருமுடிவாக்கம் வரை வழி நெடுகிலும் இருபக்கமும் ஆண்கள், பெண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக நின்று கையில் பூரண கும்பம் மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
The post புதிய பொறியியல் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.