காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோர் 20.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 7ம் தேதி நாளிதழ்களில் அறிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் நலன் கருதி, வரும் 30ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு: கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.