10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை: பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது

சென்னை: பத்து மற்றும் பிளஸ் 2ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2 தேர்வு டிசம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. தேர்வுகள் காலை 9.45 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். வழக்கம் போல் விடைக்குறிப்பில் தகவல்கள் எழுதவும், கேள்வித்தாள்களை படித்துப் பார்க்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு அட்டவணை
தேதி பாடம்
டிசம்பர் 10 தமிழ்
டிசம்பர் 11 விருப்ப மொழி பாடம்
டிசம்பர் 12 ஆங்கிலம்
டிசம்பர் 16 கணக்கு
டிசம்பர் 19 அறிவியல்
டிசம்பர் 23 சமூக அறிவியல்

பிளஸ் 2 அட்டவணை
தேதி பாடம்
டிசம்பர் 9 தமிழ்
டிசம்பர் 10 ஆங்கிலம்
டிசம்பர் 12 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், இந்திய பண்பாடு, சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியல், நர்சிங்
டிசம்பர் 14 உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அடிப்படை எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங் உள்பட தொழிற்பாடங்கள்
டிசம்பர் 17 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் மற்றும் தொழில் பாடங்கள்
டிசம்பர் 20 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
டிசம்பர் 23 இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை: பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது appeared first on Dinakaran.

Related Stories: