அப்போது லட்சுமணன், கோடீஸ்வரன், வருண் ஆகியோருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் பின் தங்கினர். 3 பேரும் வருவார்கள் என்று கருதிய மற்ற அனைவரும் சென்றுவிட்டனர். இதற்கிடையே வழி தெரியாமல் 3 பேரும் உள் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். நீண்ட நேரமாக அவர்கள் வராததால் சன்னிதானத்திற்கு வந்த மற்ற பக்தர்கள் இதுகுறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார், வனத்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு உள் வனப்பகுதியில் சிக்கிக்கொண்ட 3 பேரையும் அவர்கள் மீட்டு சன்னிதானத்திற்கு அழைத்து வந்தனர். நீண்ட நேரமாக வனப்பகுதியில் சிக்கியதாலும், பயந்திருந்ததாலும் அவர்களுக்கு சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தரிசனம் செய்துவிட்டு நேற்று சென்னைக்கு திரும்பினர்.
The post புல்மேடு வழியாக சபரிமலை செல்லும் வழியில் அடர்ந்த காட்டில் சிக்கிய 3 சென்னை ஐயப்ப பக்தர்கள்: தேசிய பேரிடர் மீட்பு படை, போலீஸ், வனத்துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.